NiFty Television

Neat, Informative, Feasible, Timely, Yours

Friday, August 6, 2021

சென்னையில்‌ நடைபெற்ற சீரமைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில்‌ கொடிசியா தலைவர்‌ பங்கேற்பு!

கோவை: சென்னையில்நடைபெற்ற சீரமைக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை தொடர்பான ஆலோசனை இன்று நடைப்பெற்றது.

இன்று சென்னையில்நடைபெற்ற சீரமைக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில்கொடிசியா தலைவர்எம்‌.வி. ரமேஷ்பாபுகலந்துகொண்டார்‌.



தமிழக அரசின்நிதி மற்றும்மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்டாக்டர்பழனிவேல்தியாகராஜன்‌, ஊரக தொழில்துறை அமைச்சர்தா.மோ. அன்பரசன்‌, வி.அருண்ராய, .., சிறு குறு மற்றும்நடுத்தர தொழில்துறை செயலாளர்‌, எஸ்‌.கிருஷ்ணன்‌, ... நிதித்துறை, கூடுதல்தலைமைச்செயலாளர்‌, சிஜீ தாமஸ்வைத்தியன்‌, .. தொழில்துறை ஆணையர்‌, ஆர்‌. கஜலட்சுமி, ... மேலாண்மை இயக்குநர்‌, சிட்கோ, ஆகியோர்இக்கூட்டத்தில்கலந்து கொண்டனர்‌.

இதுகுறித்து கொடிசியா தலைவர்பேசும்போது தமிழக அரசு சிறு குறு மற்றும்நடுத்தர தொழில்நிறுவனங்களின்வளர்ச்சியில்அக்கறை செலுத்துவதற்கும்தொடர்ச்சியாக அது குறித்த கூட்டங்களை நடத்துவதற்கும்தமிழக முதல்வர்‌, அமைச்சர்கள்மற்றும்தமிழக அரசின்அதிகாரிகள்ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்‌.

மேலும்கீழ்க்கண்ட கோரிக்கைகளை சமர்ப்பித்தார்‌.

தகுதி உள்ள அனைவருக்கும்சிறப்பு முகாம்கள்மூலம்கோவிட்தடுப்பூசிகள்முன்னுரிமை அளித்து உடனடியாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும்‌.

சிறு குறு மற்றும்நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு நிதி உதவி

தமிழ்நாடு தொழில்முதலீட்டு கழகம்போன்ற மாநில நிதி நிறுவனங்களின்கடன்தொகை மேலும்‌ 6 மாதங்களுக்கு திருத்தி அமைக்கப்பட்டு பொதுமுடக்க காலத்திற்கு வட்டி தொகை தள்ளுபடி செய்யப்பட வேண்டும்‌.

தமிழகத்தில்உள்ள அனைத்து சிறு குறு மற்றும்நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கும்எவ்வித பிணையும்இன்றி 3 கோடி ரூபாய்கூடுதலாக மூன்று ஆண்டு காலத்திற்கான கடன்உதவி வழங்குவதோடு ஏற்கனவே தமிழ்நாடு தொழில்முதலீட்டு கழக வாடிக்கையாளராக உள்ள நிறுவனங்களுக்கு ஓராண்டு கால கடன்விடுப்பு காலம்வழங்கப்படவேண்டும்‌.

தொழிற்சாலைகளின்மேம்பாட்டுக்கான தற்போது உள்ள சிப்காட்மற்றும்சிட்கோ தொழிற்பேட்டைகளில்வழங்கப்படும்அனைத்து சலுகைகள்‌, மானியங்களும்அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும்உடைய தொழிற்பேட்டைகளுக்கும்விரிவாக்கப்பட வேண்டும்‌.

கோயம்புத்தூரில்வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்ற அனைத்து உற்பத்தி சார்ந்த (புதிய மற்றும்விரிவுபடுத்தப்படும்‌) தொழிற்சாலைகளுக்கும்‌ 30% சிறப்பு முதலீட்டு மானியம்அளிக்கப்பட வேண்டும்‌.

தமிழக அரசின்சிறு குறு மற்றும்நடுத்தர தொழிற்சாலைகள்சட்டத்தின்படி கீழ்க்கண்ட முக்கிய தொழில்துறைகளுக்கு 25% முதலீட்டு மானியம்வழங்கப்பட வேண்டும்‌.

ஆட்டோமொபைல்

சூரிய ஒளி தகடுகள்

தோல்தொழிற்சாலை

மின்சார உதிரிபாகங்கள்‌, உற்பத்தி தொழில்சாலை

பம்ப்மோட்டார்தயாரிப்பாளர்கள்

ஐவுளி இயந்திர பாகங்கள்தயாரிப்பாளர்கள்

இந்த நிதியானது கோயம்புத்தூரைவிட மற்ற நகரங்களில்அதிகம்பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால்கோயம்புத்தூரில்தான்சிறு குறு மற்றும்நடத்த தொழிற்சாலைகள்அதிக எண்ணிக்கையில்உள்ளன.

இந்திய சிறுதொழில்வளர்ச்சி வங்கி (சிட்பி) 2019 மார்ச்மாதம்வரையிலான தகுதியுள்ள கடன்விண்ணப்பங்களுக்கு தான்கடன்உதவி வழங்கப்பட்டுள்ளது. இன்னும்ஏராளமான சிறு குறு மற்றும்நழுத்தர தொழிற்சாலைகள்கடன்உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்‌. இந்நிலையில்வங்கியானது புதிய கடன்உதவி பெறுவோருக்கு மானிய உதவி இல்லை என்று அறிவித்துள்ளது.

ரொக்க கடன்வசதி உள்ளிட்ட அனைத்து கடன்தொகைளுக்கும்‌ 31.03.2022 வரை மேலும்ஓராண்டு வட்டி தொகை தள்ளுபடி செய்யப்பட வேண்டும்‌.

பொதுத்துறை நிறுவனங்கள்மற்றும்உள்ள அரசு துறை நிறுவனங்கள்சிறு குறு மற்றும்நடுத்தர தொழிற்சாலைகளுக்கு நிலுவையில்வைத்துள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும்‌.

உற்பத்தியை ஊக்குவிக்கவும்‌, அதிகரிக்கவும்உதவும்வகையில்அனைத்து சிறு குறு மற்றும்நடுத்தர தொழிற்சாலைகளுக்கு Interest Subvention Charges 6% ஆக நீட்டிக்கப்பட வேண்டும்.

சிறு குறு மற்றும்நடுத்தர தொழில்நிறுவனங்கள்கடன்தொகை செலுத்த இயலாத சூழல்ஏற்படும்போது அதற்கான வட்டி மற்றும்சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில்இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்‌.

தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டம்‌, சிறு குறு மற்றும்நடுத்தர தொழில்நிறுவனங்களின்விரிவாக்கம்மற்றும்நவீனப்படுத்துவதற்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும்‌.

அரசு துறைகளில்கெடுபிடி தவிர்க்கப்பட்டு ஒவ்வொரு சிறு குறு மற்றும்நடுத்தர தொழில்நிறுவனங்களின்தன்உறுதி சான்றிதழ்கள்மதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்‌.

கோயம்புத்தூர்மாஸ்டர்பிளான்

•1994ல்இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கோயம்புத்தூர்மாஸ்டர்பிளான்திருத்தி அமைக்கப்பட வேண்டும்‌. தற்போதைய மற்றும்எதிர்கால தேவைகளை கருத்தில்கொண்டு புதிய மாஸ்டர்பிளான்வெளியீடு விரைவுபடுத்தப்பட வேண்டும்‌.

ஒற்றைச்சாளர அனுமதி

நகர ஊரமைப்பு இயக்குநர்‌, உள்ளூர்திட்ட குழுமம்மற்றும்வீட்டு வளர்ச்சி துறை ஆகியோரிடம்கட்டிடங்களுக்கான முறையான அனுமதி பெறுவதை விரைவுபடுத்தும்வகையில்தகுந்த மென்பொருளுடன்ஒற்றைச்சாளர அனுமதி முறை அறிமுகப்படுத்தபட வேண்டும்‌.

இதன்மூலம்தொழிற்சாலை கட்டுமானங்களுக்கு தேவையான தெழிற்சாலை நில்வகைப்பாடு குறித்த விண்ணப்பங்கள்மற்றும்அனுமதிகள்பெறுவது தாமதமாகாமல்விரைவுபடுத்த முடியும்‌.

செலுத்தப்பட வேண்டிய தொகைகள்

மின்சார கட்டணம்‌, சொத்துவரி, தொழில்வரி, உரிமத்தொகை, மாசுகட்பாடு வாரிய கட்டணம்உள்ளிட்ட அனைத்து செலுத்தவேண்டிய தொகைகளும்மேலும்‌ 6 மாதங்களுக்கு 31.03.2022 வரை எவ்விதமான வட்டி மற்றும்நடவடிக்கைகளில்இன்றி தள்ளி வைக்கப்பட வேண்டும்‌.

தமிழகத்தில்பணியாளர்கள்எனும்மனிதவளத்தை வலுப்படுத்துதல்

நமது மாநிலம்பெரும்பான்மையாக மற்ற மாநிலங்களின்குறிப்பாக, வடக்கு மற்றும்வடகிழக்கு மாநிலங்களின்பணியாளர்களை நம்பி இருப்பதை கோவிட்பெருந்தொற்றின்முதல்மற்றும்இரண்டாம்அலைகள்தெளிவாக எடுத்துக்காட்டின. மற்ற மாநிலத்தை சார்ந்த தொழிலாளர்கள்தங்கள்ஊர்களுக்கு திரும்பிய பொழுது தொழிற்சாலைகள்கிட்டத்தட்ட இயங்காமல்நின்று போயின.

நமது மாநிலத்தில்தற்போது உள்ள தகுதியான பணியாளர்களை திறன்மிக்கவர்களாக மாற்றுவதற்கான ஒரு சிறப்பு திட்டம்வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்‌. இதில்அரசுடன்ஒத்துழைக்க எப்பொழுதும்தயராக உள்ளோம்‌.

அந்தந்த தொழிற்சாலை வளாகங்களில்புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களின்தங்குமிடம்வசதியை உருவாக்கிட மானியங்களை அனுமதிக்க வேண்டும்‌.

திறன்மேம்பாட்டு மையங்கள்

தேவையான திறன்களுடன்கூடிய போதுமான மனிதவளத்தை சிறு குறு மற்றும்நடுத்தர தொழில்நிறுவனங்கள்பெற்றிட உதவும்வகையில்திறன்மேம்பாட்டு மையங்கள்அமைக்கப்பட வேண்டும்‌.

ஊரக மேம்பாட்டு துறை, மாவட்ட தொழில்மையம்மற்றும்திறன்மேம்பாட்டு மையத்தை உருவாக்கும்அமைப்பு இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட்டு ஊரக பகுதியில்உள்ள பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதன்மூலம்அவர்களை சிறு குறு மற்றும்நடுத்தர தொழில்நிறுவனங்கள்பயன்படுத்திக்கொள்ள முடியும்‌.

மாநில அரசு திறன்மேம்பாட்டுக்கான 90% நிதி வழங்க வேண்டும்‌.

ஊரக பகுதி தொழிலாளர்களுக்கு பயிற்சி காலத்திற்கான உதவி தொகை மற்றும்தங்குமிடம்வழங்கப்பட வேண்டும்‌.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்பணி புரிவோரை தொழிற்சாலைகளில்பணி அமர்த்துவதன்மூலம்தொழில்சாலைகளில்தொழிலாளர்தேவை ஓரளவு நிறைவு செய்யப்படும்‌.

125 KVA மற்றும்அதற்கு மேற்பட்ட திறன்படைத்த டீசல்ஜெனரேட்டர்களுக்கு தேவையான மாசுக்கட்டுப்பாட்டு கருவிகள்

முன்பு இருந்த மின்தட்டுப்பாடு சிக்கல்அரசாங்கத்தால்தீர்க்கப்பட்டுவிட்டது. தமிழகம்மற்ற மாநிலங்களுக்கு மின்சார ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ள மின்மிகை மாநிலமாக மாறி உள்ளது. ஏராளமான காற்றாலைகள்மற்றும்சூரியஒளி மின்சார தயாரிப்பு கருவிகள்மூலம்பசுமை ஆற்றல்உற்பத்தி இங்கு அதிகரித்துள்ளது.

தற்போது உள்ள நிலையில்ஒரு மாற்று ஏற்பாடாக குறுகிய நேரத்திற்கே ஜெனரேட்டர்கள்தேவைப்படுகின்றன. டீசல்விலை உயர்வு காரணமாக பொருளாதார ரீதியிலும்இதன்பயன்குறைந்து வருகிறது.

இந்த நிலையில்தமிழ்நாடு மாசுக்கட்டுப்பட்டு வாரியம்இதுகுறித்து எடுத்துவரும்நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு ஆவனம்செய்ய வேண்டும்‌.

இராணுவ தளவாட உற்பத்தி பொருட்களுக்கான சோதனை மற்றும்உள்கட்டமைப்பு திட்டம்

மேற்சொன்ன திட்டத்தின்கீழ்இராணுவ தளவாட உற்பத்தி துறை தமிழகத்தின்‌ 400 கோடி ரூபாய்முதலீட்டில்ஒரு இராணுவ தளவாட சோதனை மையத்தை அமைக்க விருப்பம்தெரிவித்துள்ளது. இந்த மையம்அமைவதற்கு கோயம்புத்தூர்ஏற்ற இடமாகும்‌.

இந்திய முப்படைகளுக்கு தேவையான உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்ய உதவும்வகையில்அமையும்இந்த மையத்தின்திட்டச்செலவான 400 கோடி ரூபாயில்மத்திய அரசாங்கம்‌ 75% மேற்சொன்ன திட்டத்தின்கீழ்வழங்குவதால்மீதி உள்ள 25% நிதி உதவியை வழங்குமாறு மாநில அரசை நாங்கள்கேட்டுக்கொள்கிறோம்‌.

பெரும்நிறுவனங்கள்‌, சிறு குறு மற்றும்நடுத்தர தொழில்நிறுவனங்கள்மற்றும்புதிய ஸ்டார்ட்அப்கள்இந்த சோதனை மைய வசதியை பயன்படுத்திக்கொண்டு தங்கள்உற்பத்தி பொருட்களை இராணுவத்திற்கு வழங்குவதற்கான சான்றிதழைப்பெறமுடியும்‌.

ஆற்றல்

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும்மின்பகிர்மான கழகம்‌, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம்சமர்ப்பித்துள்ள 15% தீர்வை குறித்து மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்‌. அதில்வருமானம்பாதிக்கப்படும்வாடிக்கையாளர்கள்‌, தொழிலாளர்கள்மற்றும்அவர்களின்குழும்பத்தினர்ஆகியவையும்கவனத்தில்கொள்ளப்படவேண்டும்‌.

காற்றாலை உற்பத்தி மற்றும்சூரியஒளி உற்பத்திற்கான நிலுவையில்உள்ள தொகையை விரைந்து வழங்குவதற்கு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும்மின்பகிர்மான கழகம்நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.

•24*7 ஆற்றல்தேவையை எதிர்கொள்ளும்வகையில்தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும்மின்பகிர்மான கழகம்தயராக இருக்க வேண்டும்‌.

உட்கட்டமைப்பு

கோவையில்‌ 1000 முதல்‌ 1500 ஏக்கர்வரை பரப்புள்ள ஒரு மாபெரும்தொழிற்பேட்டை வளாகம்சிட்கோவால்உருவாக்கப்பட வேண்டும்‌.

கோயம்புத்தூர்சிறு குறு மற்றும்நடுத்தர தொழில்மையமாக இருப்பதால்‌, கோவையைச்சுற்றி உள்ள 100 கி.மீ பரப்பளவில்பெரும்தொழிற்சாலைகள்அமைக்கப்பட வேண்டும்‌.

கோயம்புத்தூர்‌ - மதுரை, கோயம்புத்தூர்‌ - ஓர்தொழில்வழித்தடங்கள்அறிவிக்கப்பட வேண்டும்‌.

சிறுதொழிற்சாலைகளின்நலன்கருதி‌, தமிழகத்தில்மாடி மற்றும்பல அடுக்கு தொழிற்பேட்டைகள்அமைக்கப்பட வேண்டும்‌.

கோயம்புத்தூர்‌ - ஓசூர்தொழில்வழிதடத்தை மேம்படுத்துவதன்மூலம்தமிழகத்தின்மொத்த உள்நாட்டு உற்பத்தி 3 ஆண்டுகளில்இருமடங்காகும்‌.

தமிழ்நாட்டில்இராணுவ தொழில்வழித்தடத்தை மேம்படுத்துவதன்மூலம்சென்னை, கோவை, சேலம்‌, திருச்சி, ஓசூர்பகுதிகளில்உள்ள தொழில்நிறுவனங்களை நல்ல முறையில்பயன்படுத்திக்கொண்டு மேம்பட முடியும்‌.

இன்றைய சூழலில்கோயம்புத்தூருக்கு புறநகர்ரயில்சேவை அளிக்கும்மெட்ரோ ரயில்கள்தேவைப்படுகின்றன.

தற்போது நடைபெற்று வரும்மேம்பாலப்பணிகள்‌, சரக்கு முனையங்களை நவீனப்படுத்துதல்‌, ரயில்நிலையங்களை மேம்படுத்துதல்உள்ளிட்டவற்றை விரைவுபடுத்த வேண்டும்‌.

மேற்கு பைபாஸ்சாலையை உருவாக்க வேண்டும்‌.

கொச்சின்எல்லை சாலை - பல்லடம்முதல்மதுக்கரை வரை உள்ள சாலை அகலப்படுத்தப்பட்டு நான்கு வழிச்சாலையாக்கப்பட வேண்டும்‌.

பல்லடம்முதல்சிந்தாமணிபுதூர்வரையிலான சாலை அகலப்படுத்தப்பட்டு நான்கு வழிச்சாலை ஆக்கப்பட வேண்டும்‌.

சத்தியமங்கலம்சாலை அகலப்படுத்தப்பட்டு குரும்ப்பாளையத்தில்இருந்து நான்கு வழிச்சாலையாக்கப்பட வேண்டும்‌.

நகர எல்லைக்குள்போக்குவரத்து நெரிசலை குறைக்கும்வகையில்பேருந்து முனையம்அமைய முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்‌.

கீழ்க்கண்ட இருவழி சாலைகள்நான்கு வழிச்சாலைகளாக தரம்உயர்த்தப்படுவதால்வாகனப்போக்குவரத்து எளிதாகும்‌.

கோயம்புத்தூர்‌ - சத்தியமங்கலம்‌ NH 948

கோயம்புத்தூர்‌ - மேட்டுப்பாளையம்‌ NH 181

எல்அண்டு டி பைபாஸ்சாலை, நீலம்பூர்முதல்மதுக்கரை வரை NH 544

தேவையான மேம்பாலங்கள்

சிங்காநல்லூர்‌, திருச்சி சாலை NH 81

சுந்தராபுரம்‌, பொள்ளாச்சி சாலை NH 83

சரவணம்பட்டி, சத்தி சாலை NH 948

துடியலூர்‌, மேட்டுப்பாளையம்சாலை NH 181

நகர ரயில்சேவை

ஏற்கனவே உள்ள உட்கட்டமைப்பு வசதிகளைப்பயன்படுத்தி, இருகூர்‌, கோயம்புத்தூர்சந்திப்பு, போத்தனூர்‌, பிறகு மீண்டும்இருகூர்வரும்வகையில்அமையும்நகர ரயில்தடம்சாலை போக்குவரத்தை குறைக்கும்‌.

கோவையில்இருந்து 100 கி.மீ தொலைவை இணைக்கும்வகையில்ரயில்சேவைகள்மூலம்ஈரோடு, பழனி, ஷோரனூர்போன்ற ஊர்களுக்கு புறநகர்ரயில்சேவை அளிக்கலாம்‌.

அறிவியல்‌, தொழில்நுட்பம்‌, வடிவமைப்பு, நிர்வாகம்‌, போன்ற துறைகளில்உயர்கல்வி நிறுவனத்தை கோவையில்அமைக்க வேண்டும்‌.

நில கையகப்படுத்துதல்சட்ட அறிமுகம்

ஆந்திரப்பிரதேசத்திலும்குஜராத்திலும்உள்ளது போல்நிலம்கையகப்படுத்துதல்சட்டம்அறிமுகப்படுத்தப்பட வேண்டும்‌. அரசு ஆணை பிறப்பிப்பது மட்டுமே தற்போதுள்ள முறையாக உள்ளது. தொலைநோக்குதல்தமிழக மக்களின்பயன்கருத்இந்த புதிய சட்ட அறிமுகம்தேவைப்படுகிறது.

விமான நிலைய விரிவாக்கம்

இந்தியாவில்முதல்இருபது விமான நிலையங்களில்ஒன்றாக கோயம்புத்தூர்விமான நிலையம்இயங்கி வருகிறது. கோயம்புத்தூர்விமான நிலைய விரிவாக்கத்திற்கு 650 ஏக்கர்நிலம்தேவைப்படுகிறது. தேவையான நிலத்தை கையகப்படுத்தி விரிவாக்க பணியை விரைந்து செய்து தர வேண்டுகிறோம்‌.

இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட்‌, சிங்கப்பூர்ஏர்லைன்ஸ்‌, ஏர்லங்கா, ஏர்அரேபியா அண்டு எமரேட்ஸ்போன்ற நிறுவனங்கள்இங்கிருந்த சர்வதேச விமான சேவை அளிக்க தயாராக உள்ளன. அதற்கு கோவை விமான நிலைய ஓடுபாதை அதற்கேற்ப அகலப்படுத்தப்பட வேண்டும்‌.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும்மின்பகிர்மான கழகம்மற்றும்ஒருங்கிணைந்த கட்டிட மேம்பாட்டு விதிகள்

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும்மின்பகிர்மான கழகம்மற்றும்ஒருங்கிணைந்த கட்டிட மேம்பாட்டு விதிகளுக்கு இடையே உள்ள விதிகளில்உள்ள முரண்பாடுகள்கட்டுமானம்மற்றும்அதில்ஒதுக்கப்பட வேண்டிய இடங்கள்குறித்து சிக்கல்களை உருவாக்குகின்றன. எனவே இந்த விதி முரண்பாடுகள்களையப்பட சீராக்கப்பட வேண்டும்‌.

தமிழ்நாடு ரியல்எஸ்டேட்ஒழுங்குமுறை ஆணையம்கோவையில்அமைக்கப்பட வேண்டும்‌.

அனுமதிக்கான விண்ணப்ப கட்டணம்‌, உட்கட்டமைப்பு கட்டணம்‌, காப்புத்தொகை மற்றும்மாசுகட்டுப்பாட்டு கட்டணங்கள்குறைக்கப்பட வேண்டும்‌.

தமிழக ரியல்எஸ்டேட்தொழில்சார்ந்த பொருளாதாரத்தில்எதிர்மறைத்தாக்கம்காணப்படுவதால்‌, இது சார்ந்த பல்வேறு அரசு கட்டணங்களை குறைப்பதன்மூலம்‌, வாடிக்கையாளருக்கு குறைந்த விலையில்அளிக்க முடியும்‌.

இராணுவ தொழில்வழித்தடம்மற்றும்தொழில்வளர்த்தெடுப்பு, மையங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வருதல்‌, வேளாண்பொருட்கள்கூடங்கள்மற்றும்குளிர்பதன சேகரிப்பு கூடங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்‌.

அனைத்து தொழில்அமைப்புகளும்தரும்கோரிக்கைகளை பரிசீலித்து நடைமுறைப்படுத்துவதற்கு, ஒரு சிறப்பு ஐஏஎஸ்அதிகாரி நியமிக்கப்படுவது பலவகையிலும்பயன்தருவதாக அமையும்‌.

சிறு குறு மற்றும்நடுத்தர தொழில்நிறுவனங்கள்பயன்பெறும்வகையில்இந்த கூட்டத்தில்பங்கேற்க வாய்ப்பு அளித்த அமைச்சர்அவர்களுக்கு கொடிசியாவின்சார்பில்எங்கள்மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்‌. தொடர்ந்து உங்கள்நல்ஆதரவையும்‌, ஒத்துழைப்பையும்வேண்டுகிறோம்‌.

இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.