NiFty Television

Neat, Informative, Feasible, Timely, Yours

Sunday, April 6, 2025

வாழ்வில் எல்லாம் நேரும் நல்லதும் கெட்டதும் மாறும் புரிந்தால் தெளிந்தால் போதும் அமைதி வந்தே சேரும்



இந்த நேரம் எங்கோ மழை பொழிகின்றது 

இதே நேரம் எங்கோ வெயில் சுடுகின்றது 

செடியில் எங்கோ  மலர் துளிர்க்கின்றது 

புயலில்  எங்கோ மரம் விழுகின்றது

உலகம் இரண்டையும் பார்க்கின்றது 

மனிதன் மனமே மயங்குகின்றது 

வாழ்வில் எல்லாம் நேரும் 

நல்லதும்  கெட்டதும் மாறும்

புரிந்தால் தெளிந்தால் போதும் 

அமைதி வந்தே சேரும் 

புரிந்தால் தெளிந்தால் போதும் 

அமைதி வந்தே சேரும் 


இந்த நேரம் எங்கோ  மழலை அழுகின்றது 

இதே நேரம் சாலை மரணம் சிரிக்கின்றது

காதலில் எங்கோ முகம்  சிவக்கின்றது 

கண்ணீர் எங்கோ விழி வழிகின்றது

உலகம் இரண்டையும் பார்க்கின்றது 

மனிதன் மனமே மயங்குகின்றது  

வாழ்வில் எல்லாம் நேரும் 

நல்லதும்  கெட்டதும் மாறும்

புரிந்தால் தெளிந்தால் போதும் 

அமைதி வந்தே சேரும் 


இந்த நேரம் எங்கோ கிரீடம் தலையேறியது 

இதே நேரம் எங்கோ மானம் பறிபோனது 

எரிமலை எங்கோ கனல் எறிகின்றது 

பனிமலை எங்கோ குளிர் தருகின்றது

உலகம் இரண்டையும் பார்க்கின்றது 

மனிதன் மனமே மயங்குகின்றது  

வாழ்வில் எல்லாம் நேரும் 

நல்லதும்  கெட்டதும் மாறும்

புரிந்தால் தெளிந்தால் போதும் 

அமைதி வந்தே சேரும் .


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.