NiFty Television

Neat, Informative, Feasible, Timely, Yours

Wednesday, March 30, 2022

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு ரூ 6,062.45 கோடிக்கு அமைச்சரவை ஒப்புதல்

 உலக வங்கியின் உதவியுடன் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறனை அதிகரித்தல் மற்றும் துரிதப்படுத்துதல் திட்டத்திற்கு 808 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது ரூ. 6,062.45 கோடி வழங்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இந்த புதிய திட்டம் 2022-23-ம் நிதியாண்டில் தொடங்கும்.

 

தொடர்புடைய செலவு:

திட்டத்திற்கான மொத்த செலவு ரூ 6,062.45 கோடி அல்லது 808 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்இதில் ரூ 3750 கோடி அல்லது 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் உலக வங்கியின் கடனாக பெறப்பட்டுமீதமுள்ள ரூ 2312.45 கோடி அல்லது 308 மில்லியன் அமெரிக்க டாலர் இந்திய அரசால் நிதியளிக்கப்படும்.

 

விரிவான விவரங்கள்:

"சிறுகுறுநடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறனை அதிகரித்தல் மற்றும் துரிதப்படுத்துதல்என்பது உலக வங்கியின் உதவியுடனான மத்தியத் துறைத் திட்டமாகும்சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கொரோனா வைரஸ் மீட்பு நடவடிக்கைகளை இது ஆதரிக்கிறது.

 

சந்தை மற்றும் கடனுக்கான அணுகலை மேம்படுத்துதல்மத்தியிலும் மாநிலத்திலும் அமைப்புகள் மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துதல்மத்திய-மாநில இணைப்புகள் மற்றும் கூட்டுகளை மேம்படுத்துதல்தாமதமான பணம் செலுத்துதல் குறித்த சிக்கல்களை களைதல் மற்றும் சிறுகுறுநடுத்தர தொழில்களின் பசுமைப்படுத்துதல் போன்றவற்றை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் திறனை தேசிய அளவில் கட்டியெழுப்புவதுடன்மாநிலங்களில் செயல்படுத்தும் திறன் மற்றும் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்களின் பரப்பை அதிகரிக்க இத்திட்டம் முயற்சிக்கும்.

 

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சாத்தியம் உள்ளிட்ட முக்கிய தாக்கம்:

தற்போதுள்ள சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் திட்டங்களின் தாக்கத்தை இத்திட்டம் மேம்படுத்துவதன் மூலம் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையில் பொதுவான மற்றும் கொவிட் தொடர்பான சவால்களை எதிர்கொள்ளும்,

குறிப்பாகபோட்டித்திறன்திறன் மேம்பாடுதர செறிவூட்டல்தொழில்நுட்ப மேம்பாடுடிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சந்தைப்படுத்தல் ஊக்குவிப்பு போன்றவற்றை இந்த திட்டம் மேம்படுத்தும்.

மாநிலங்களுடனான மேம்பட்ட ஒத்துழைப்பின் மூலம் வேலைவாய்ப்பு-உருவாக்குபவராகவும்சந்தை ஊக்குவிப்பாளராகவும்நிதி வசதியாளராகவும் இத்திட்டம் இருக்கும்மேலும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகள் மற்றும் பசுமையாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும்.

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1811360

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.