Tuesday, April 8, 2025

புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி கான்பதில்லை

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை

பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கு சொந்தம் எல்லாம் துன்பம்

புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி கான்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லை
மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி கான்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை

கனவு காணும் மனிதனுக்கு நினைபதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு
அவன் கனவில் அவள் வருவாள் அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார் யாரை பார்த்து அழைப்பாள்

புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி கான்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.