1) டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு 4வது தங்கப் பதக்கத்தை பெற்றுத்தந்த பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து.
2) நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தி பிரிவினை சக்திகளுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் - குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்யா நாயுடு அழைப்பு.
3) கார்பி அமைதி ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்து
*** அஸ்ஸாம் மாநிலத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதி செய்வதில் மோதி அரசு உறுதியுடன் உள்ளது - உள்துறை அமைச்சர் அமித் ஷா.
4) தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு தங்குதடையின்றி வழங்கி வருகிறது - தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் எல் முருகன்.
5) பஞ்சு மீதான ஒரு சதவீத நுழைவு வரியை ரத்து செய்ய நடப்பு கூட்டத்தொடரிலேயே சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும் - சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு.
6) சென்னை உட்பட தமிழகத்தின் 10 இடங்களில் அறநிலையதம்துறை சார்பில் 150 கோடி ரூபாய் செலவில் கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் அறிவிப்பு.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.