கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிரதமர் பயிர் காப்பீடுத்திட்டத்தால் பயனடைந்து வரும் விவசாயிகள் அத்திட்டத்தை செயல்படுத்தி வரும் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
அம்மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் நெல், சோளம், மக்கா சோளம், உளுந்து, துவரை, பாசி பயிறு, கரும்பு, வெங்காயம், மஞ்சள், வாழை என ஏராளமான பயிர்கள் விளைவிக்கப்படுகிறது.
சாகுபடியின் போது ஏற்படும் இழப்புக்கள், அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்புகள், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்புகள், பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் ஏற்படும் இழப்புகள் ஆகியவற்றில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க இப்பயிர் வகைகள் அனைத்தும் காப்பீடு செய்யப்பட்டு வருகிறது.
2020 - 2021 ஆம் ஆண்டில் மட்டும் கோவை மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தால் மூவாயிரத்து 817 விவசாயிகள் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனிசாமி, விவசாயி
ராமசாமி, விவசாயி
வெள்ளியங்கிரி, விவசாயி
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.