நம் கோவில்களின் அவல நிலை -By Thiru Rangarajan Narasimhan -------------------------------------------------------------- சில நாட்களுக்கு முன் அவரவர் ஊரில் இருக்கும் கோவில்களின் நிலையை எனக்கு புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் என்று கேட்டிருந்தேன். புகைப்படங்கள் அனுப்பிய அனைவருக்கும் என் நன்றி. 1000க்கும் மேற்பட்ட மின்னஞ்சல் இதுவரை வந்துள்ளன. அதற்கு மேலும் வந்து கொண்டு இருக்கின்றன. இந்த கோவில்களின் புகைப்படங்களை உங்கள் சார்பில் நான் நீதிமன்றத்திற்கு 18.11.2020 அன்று சமர்ப்பிப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். ஸ்ரீரங்கநாதனின் வழிகாட்டுதலின் பேரில் தொடர்ந்த இந்த பயணம் இன்று இந்த நிலையை அடைந்தது அவனுடைய திருவுள்ளமே அன்றி மற்றில்லை. ஆனாலும் ஸ்ரீ ராமபிரான் கட்டளையை ஏற்று நாம் நம் செயல்பாடுகளை சரிவர நடத்தி ஸ்ரீ ராமபிரானுக்கு பெருமை சேர்க்க சில விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த காணொளி. அன்பர்கள் உங்களுடைய கருத்துகளை பின்னூட்டத்தில் பதிவிடவும். நம் கோவில் நம் பெருமை நம் உரிமை. இதை நாம் நம் பெருமானுக்காக அவன் அடியவர்களாக அடைந்தே தீருவோம் என்று உறுதி எடுப்போம். ஜெய் ஸ்ரீ ராமாநுஜா! ஜெய் ஸ்ரீ ராம்! ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா! ஜெய் ஸ்ரீ ரங்கநாதா!!!
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.